சேலம் சூரமங்கலம் நரசோதிப்பட்டி பகுதியைச் சேர்ந்த கௌதம் என்ற மாணவன் நீட் தேர்வில் வெற்றி பெறவேண்டும் என்று தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வந்துள்ளார். 2023 முதல் இரண்டு முறை நீட்தேர்வு எழுதியிருந்தார்.
கடந்த முறை எழுதிய நீட்தேர்வில் போதிய மதிப்பெண் எடுக்காததால், தற்போது நடந்த நீட்தேர்வை மூன்றாவது முறையாக கௌதம் எழுதியிருந்தார். இந்த தேர்வில் கௌதம் சரியாக தேர்வு எழுதவில்லை என தெரிகிறது. இதனால் கௌதம் கடந்த சில நாட்களாக வீட்டில் சோகமாக இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் வீட்டில் மாணவனின் பெற்றோர் இல்லாதபோது நேற்று இரவு கௌதம் வீட்டில் உள்ள பேனில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.







