முடி செலுத்த காணிக்கை வசூலித்தால் கடும் நடவடிக்கை – அறநிலையத்துறை

தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் முடி காணிக்கை செலுத்த, மக்களிடம் கட்டணம் வசூலித்தால், பணி நீக்கம் செய்யப்படுவர் என இந்து சமய அறநிலையத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும், பக்தர்கள் முடி காணிக்கை…

தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் முடி காணிக்கை செலுத்த, மக்களிடம் கட்டணம் வசூலித்தால், பணி நீக்கம் செய்யப்படுவர் என இந்து சமய அறநிலையத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும், பக்தர்கள் முடி காணிக்கை செலுத்த கட்டணம் இல்லை என்ற திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு சட்டப்பேரவையில் அறிவித்தார். இதனையடுத்து இது நடைமுறைக்கு வந்துள்ளது.

இதனையடுத்து மொட்டைபோடும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு மாதம், தலா 5 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் எனவும் தமிழ்நாடு அரசு அறிவித்தது.

இந்நிலையில், முடி காணிக்கை செலுத்தும் பக்தர்களிடம், எவ்வித கட்டணமும் வசூலிக்கக் கூடாது எனவும், அவ்வாறு கோரும் பணியாளர்கள், உடனடியாக பணிநீக்கம் செய்யப்படுவார்கள் எனவும் எச்சரிக்கை விடுத்து, இந்து சமய அறநிலையத்துறை, அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.