தனது பெயர், புகைப்படம், குரலை அனுமதியின்றி பயன்படுத்துவோருக்கு எதிராக
உரிமையியல் மற்றும் குற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினி காந்த் தனது பெயர், புகைப்படம், குரலை அனுமதியின்றி பயன்படுத்துவோருக்கு எதிராக உரிமையியல் மற்றும் குற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ரஜினிகாந்த் பொது அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
நடிகர் ரஜினி காந்த் சார்பில் அவரது வழக்கறிஞர் இளம்பாரதி வெளியிட்டுள்ள அந்த
பொது அறிவிப்பில், தெரிவித்திருப்பதாவது..
“ரஜினிகாந்த் என அழைக்கப்படும் எனது கட்சிக்காரரான சிவாஜி ராவ் தமிழ் சினிமாவில் பிரபலமாக அறியப்படுபவர். தமிழ் ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என அன்போடுஇ அழைக்கப்படுவர். தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியா முழுவதும் இவருக்கு ரசிகர் பட்டாள, உண்டு.
எனவே பல தளங்களில் மற்றும் பல்வேறு உற்பத்தி நிறுவனங்களில் எனது கட்சிக்காரரான நடிகர் ரஜினிகாந்தின் பெயர், புகைப்படம், குரலை அனுமதியின்றி பயன்படுத்துகின்றனர். இது பொது மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.
இனிமேல் ரஜினியின் பெயர், புகைப்படம், குரலை அவரது ஒப்புதல் இல்லாமல் வர்த்தக
ரீதியில் பயன்படுத்துவோருக்கு எதிராக குற்றவியல் மற்றும் உரிமையியல்
நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என ரஜினிகாந்த் தரப்பில் வெளியான பொது அறிவிப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
– யாழன்







