தேனி மாவட்டம் சீலையம்பட்டியில் 13 பேரை தெரு நாய்கள் கடித்து குதறியதால், வீடுகளை விட்டு வெளியே வர பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா, சீலையம்பட்டி கிராமத்தில் இன்று காலை
இயற்கை உபாதைக்கு சென்ற ஒரு பெண்ணை நாய் கடித்து உள்ளது. அவரை தொடர்ந்து
அவ்வழியாக கூலி வேலைக்குச் சென்ற ஒவ்வொரு நபர்களையும் தெரு நாய்கள் விரட்டி
விரட்டி கடித்துள்ளன. சிறு குழந்தைகள் முதல் முதியவர் வரை விரட்டி விரட்டி
கிட்டத்தட்ட 13 நபர்களை இரண்டு நாய்கள் கடித்து குதறியதில் வீட்டை விட்டு
வெளியே வர முடியாமல் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.
அம்பேத்கர் காலனி, நடுத்தெரு, ரைஸ் மில் தெரு மற்றும் வேப்பம்பட்டி ரோடு ஆகிய தெருக்களில் தான் தெருநாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதாகவும், உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட வேண்டும் எனவும், ஊராட்சி நிர்வாகத்திடம் எத்தனையோ முறை கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கினறனர்.







