சிம்புவை ஆட்டிப்படைக்கும் 9-ம் எண் விவகாரம்

“நான் அழிக்கவந்த அசுரனில்ல; காக்கவந்த ஈஸ்வரன்டா”ன்னு சிம்பு வசனம் பேச, அதையே விவாதமாக்கி, சமூக வலைத்தளங்களில் உலவச் செய்தனர் தனுஷ் ரசிகர்கள். நீண்ட காலத்திற்கு பிறகு ஈஸ்வரன் படம் மூலம் ரீ-எண்ட்ரீ கொடுத்தால், அது…

“நான் அழிக்கவந்த அசுரனில்ல; காக்கவந்த ஈஸ்வரன்டா”ன்னு சிம்பு வசனம் பேச, அதையே விவாதமாக்கி, சமூக வலைத்தளங்களில் உலவச் செய்தனர் தனுஷ் ரசிகர்கள். நீண்ட காலத்திற்கு பிறகு ஈஸ்வரன் படம் மூலம் ரீ-எண்ட்ரீ கொடுத்தால், அது வேறு பாதையில் போகுதேன்னு யோசித்த நேரத்தில் தான், வெங்கட் பிரபுவின் மாநாடு படத்தில் கமிட் ஆனார் சிம்பு. மாநாடு, பத்து தலன்னு அடுத்தடுத்து பல படங்களை கைவசம் வைத்துள்ள சிம்பு – கெளதம் வாசுதேவ் – ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் இணையும் படமாக தயாராகி வருகிறது “வெந்து தணிந்தது காடு” படம்.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி… “அடடா ஆதவன் படத்துல வற்ர சின்ன வயசு சூர்யா மாதிரி சிம்புவும் இருக்காறேன்னு” பலரும் வியந்து பேச.. நெட்டிசன்களோ வேற மாதிரி யோசிக்க ஆரம்பித்தார்கள். ஆமாங்க… கடந்தாண்டு ஐஆம் கமிங் பேக்னு, சிம்பு பதிவிட்ட போதே, அது தொடர்பான வீடியோ அக்டோபர் 22-ம் தேதி காலை 9 மணிக்கு வெளியாகும்னு அறிவித்தார். சரி வீடியோதானே என்று நினைத்த ரசிகர்களுக்கு, ஈஸ்வரன் படத்தின் டீசர் அதிகாலை 4.32க்கு ரிலீஸ் செய்தது மேலும் யோசிக்க வைத்தது. ஏனெனினல் இதன் கூட்டுத்தொகை 9 ஆக வருகிறது.

நவம்பர் 19ம் தேதி காலை 9.09க்கு மாநாடு படம் குறித்த அறிவிப்பு வெளியானதும், அதே நேரத்தில் நயன்தாரா நடித்த நெற்றிக்கண் படத்தின் டீஸர் வெளியானதும் பல்வேறு யூகங்களுக்கும் வழிவகுத்தது. இதையெல்லாம் தாண்டி, மாநாடு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நவம்பர் 21ம் தேதி, காலை 10.44 மணிக்கு வெளியாகி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்த, இந்த எண்களோட கூட்டுத்தொகையும் 9 ஆக இருந்தது.

10.08க்கு பாடல் ரிலீஸ், 04.50க்கு லிரிக் வீடியோ ரிலீஸ்னு ரசிகர்களே மிரண்டு போகும் அளவுக்கு 9ம் எண் ஆதிக்கம் தலைசுற்ற வைக்க, அட, டிரைலர் ரிலீஸான நேரமும் மாலை 05.04ன்னா அதன் கூட்டுத்தொகையும் 9 ஆகவே இருந்தது..

இந்த நிலையில தான், கெளதம் வாசுதேவ் மேனனோட “வெந்து தணிந்தது காடு” படத்தோட ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் பகல் 12.15 மணிக்கு வெளியானது. இதென்னடா புது சோதனையாக இருக்குன்னு டிவிட்டரில் பதிவிடும் அளவுக்கு போயிருக்கு இந்த விவகாரம். “ஏன் ராசா நீ இன்னு பழச மறக்கலையான்னு” இணையவாசிகள் பதிவிடவும் ஆரம்பிச்சிட்டாங்க.

சிம்பு நினைக்கிற மாதிரி 9 எண் அவரோட ராசி எண்ணாக இருந்து உண்மையாகவே அவரது திரை வாழ்க்கையில் ஒரு மாற்றம் ஏற்பட்டால்… அவரோட வழி அப்புறம் தனி வழிதான்.

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.