மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் டிஎன்டி சான்றிதழை ஒற்றை சான்றாக வழங்க வலியுறுத்தியும், சாதி வாரிய கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தியும் தென்னிந்திய விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் சீர்மரபினர் நல சங்கத்தினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டனர்.
செய்தியாளர்களை சந்தித்த அய்யாக்கண்ணு, 1979 க்கு முன்பு வரை சீர்மரபினர் உள்பட 68 சாதியினருக்கு டிஎன்டி என்றே சான்று வழங்கப்பட்டது, அதை 1979ஆம் ஆண்டு டிஎன்சி என மாற்றப்பட்ட நிலையில்
பல போராட்டங்களுக்கு 2019 ஆம் ஆண்டு டிஎன்டி என மாற்றம் செய்யப்பட்டாலும், மாநில அளவில் டிஎன்சி என்றும் மத்திய அளவில் டிஎன்டி என இரட்டை சான்று வழங்கப்பட்டு வருகிறது.

இது மாபெரும் கொடுமை அதை மாற்றி ஒற்றை சான்றாக டிஎன்டி சான்றிதழை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறோம், ஒன்றரை கோடி வாக்களர்கள் உள்ள நிலையில் தற்போதைய அரசின் நடவடிக்கையால் ஆட்சியை இழக்கும் நிலை ஏற்படும் எனவும், ஒன்றரை கோடி ஒட்டுகள் வேண்டுமா வேண்டாமா என அமைச்சர்கள் முதல் முதல்வர் வரை அவர்கள் செல்லும் இடமெல்லாம் டிஎன்டி சான்று வழங்க கோரி போராட்டம் நடத்துவோம் என பேசினார்.







