4 மொழிகளில் வெளியாகும் GODZILLA VS KONG திரைப்படம்!

ஹாலிவுட்டில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படமான “GODZILLA VS KONG” நான்கு மொழிகளில் வெளியிடப்பட உள்ளதாக படக் குழுவினர் அறிவித்துள்ளனர். ஆடம் விங்கார்ட் இயக்கத்தில் உருவாகியிருக்கும் “GODZILLA VS KONG” திரைப்படம் மார்ச் 2021…

ஹாலிவுட்டில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படமான “GODZILLA VS KONG” நான்கு மொழிகளில் வெளியிடப்பட உள்ளதாக படக் குழுவினர் அறிவித்துள்ளனர்.

ஆடம் விங்கார்ட் இயக்கத்தில் உருவாகியிருக்கும் “GODZILLA VS KONG” திரைப்படம் மார்ச் 2021 க்குள் ரிலீஸ் செய்யப்படும் என அனைவராலும் எதிர்ப்பாக்கப்படுகிறது. இந்நிலையில் வார்னர் பிரதர்ஸ் இப்படத்தின் ரிலீஸ் குறித்து டிவீட்டரில் பக்கத்தில் பதிவிட்டிருந்தது. மேலும் அதில் திரைப்படத்தின் டீசர் ஒன்றையும் பகிர்ந்திருந்தது.

இந்த திரைப்படம் திரையரங்குகளில் மட்டுமின்றி HBO Max என்ற ஓடிடி தளத்திலும் வெளியிடப்படுவதாக திரைப்பட குழுவினர் தெரிவித்தனர். மேலும் இத்திரைப்படம் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய 4 மொழிகளில் ரிலீஸ் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.