முக்கியச் செய்திகள் தமிழகம்

கொரோனா 3வது அலை தொடங்கவில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழ்நாட்டை பொறுத்தவரை கொரோனா மூன்றாவது அலை தொடங்கவில்லை என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் மூன்றாவது மெகா சிறப்பு தடுப்பூசி முகாம் 745 இடங்களில் நடைபெறுகிறது. தஞ்சை அடுத்த முன்னையம்பட்டியில் நடைபெற்ற மூன்றாவது மெகா தடுப்பூசி முகாமில் கலந்துகொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசிடமிருந்து பணம் செலுத்தி இதுவரை 4 கோடியே 19 லட்சத்து 26 ஆயிரத்து 769 தடுப்பூசிகள் பெறப்பட்டுள்ளது என்றார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தமிழ்நாட்டில் 500க்கும் மேற்பட்ட கிராமங்களில் 100 விழுக்காடு தடுப்பூசி செலுத்திவிட்டதாக கூறிய அவர், திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு நாள் ஒன்றுக்கு 2 லட்சத்து 52 ஆயிரம் தடுப்பூசிகள் போடப்பட்டு வருவதாக தெரிவித்தார். தமிழ்நாட்டில் கொரோனா மூன்றாவது அலை தொடங்கவில்லை என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்தார்.

115 கோடி தடுப்பூசிகள் இந்தியாவிற்கே தேவைப்படும்போது இந்தியாவில் தயாராகும் தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது என்பதை ஏற்க இயலாது என்று தெரிவித்த அமைச்சர்,  அதிமுக ஆட்சியில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்து போதுமான அளவிற்கு விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பெரியார் சிலைக்கு தீ வைத்ததைக் கண்டித்து திராவிடர் கழகம் போராட்டம்!

Gayathri Venkatesan

7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் செல்லும் – உயர் நீதிமன்றம்

G SaravanaKumar

புதியக் கல்விக் கொள்கை தமிழில் வெளியீடு!

Halley Karthik