உள்ளாட்சி தேர்தலில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இடஒதுக்கீடு – தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

உள்ளாட்சி தேர்தலில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்டம், வடலூரை அடுத்த நைனார்குப்பம் கிராமத்தில், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு நிலம்…

உள்ளாட்சி தேர்தலில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடலூர் மாவட்டம், வடலூரை அடுத்த நைனார்குப்பம் கிராமத்தில், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு நிலம் ஒதுக்கி பட்டா வழங்கியதை எதிர்த்து பஞ்சாயத்து தலைவர் மோகன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், மூன்றாம் பாலினத்தவருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என்று கூறினார்.

தீர்மானம் நிறைவேற்றிய பஞ்சாயத்து தலைவர் மற்றும் உறுப்பினர்களை நீக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.