முக்கியச் செய்திகள் தமிழகம்

கோவையில் துவங்கியது “பட்டறை – 2022” ஒருநாள் பயிற்சி முகாம்

“பட்டறை – 2022” போட்டி தேர்வுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி ஒருநாள் பயிற்சி முகாம், கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் துவங்கியது

கல்லூரி முடித்தவுடன் பாதிக்கும் மேற்பட்டோர் அரசுப் பணிகளில் சேர வேண்டும் என்ற எண்ணத்துடன் போட்டித் தேர்வுகளுக்கு படிக்க ஆரம்பித்துவிடுகின்றனர். வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள குரூப் தேர்வுகளுக்கு 10 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துவிட்டு, தீவிரமாக படித்து வருகின்றனர்.

இப்படி டிஎன்பிஎஸ் மற்றும் யுபிஎஸ்இ தேர்வுகளுக்காக படிக்கும் உங்களுக்கு நமது நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியும், கிங் மேக்கர் ஐஏஎஸ் ஆகாடமியும் இணைந்து ஒரு பொன்னான வாய்ப்பை ஏற்படுத்தித் தந்துள்ளன. “பட்டறை – 2022” போட்டி தேர்வுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி ஒருநாள் பயிற்சி முகாம், கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் துவங்கியது.

அண்மைச் செய்தி: ‘ஏன் இந்த மொழி வெறி? – எம்பி கனிமொழி காட்டம்’

இந்த நிகழ்ச்சியில், 200-க்கு மேற்பட்ட மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றுள்ளனர். இதுகுறித்து மாணவர்கள் தெரிவிக்கையில், தங்களுக்கு இந்த நிகழ்ச்சி மிகுந்த பயனுள்ளதாக இருப்பதாக தெரிவித்தனர். மேலும், இந்த நிகழ்ச்சி தங்களுக்கு நல் வழியை அமைக்கும் என நம்புவதாக தெரிவித்தனர்.

கைதேர்ந்த, அன்ய்பவமிக்க பயிற்சியாளர்களை கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்படுள்ள இந்த”பட்டறை 2022″ போட்டி தேர்வுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி, தமிழகத்தின் முக்கிய நகரங்களில் நடத்த திடமிடப்படுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Advertisement:
SHARE

Related posts

கோலாகலமாக நடைபெற்ற மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்

Ezhilarasan

“மகள் உயிருடன் இருக்கிறாள்” – இந்திராணி முகர்ஜி சிபிஐக்கு கடிதம்

Halley Karthik

அதிகரிக்கும் உருமாறிய கொரோனா வைரஸின் தாக்கம்!

எல்.ரேணுகாதேவி