நட்சத்திர நடிகர்கள் சுமாரான படம் எடுத்தால் கூட எளிதாக விற்று விடுகிறார்கள்-இயக்குநர் மோகன் ஜி

தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகர்கள் சுமாரான படம் எடுத்தால் கூட எளிதாக விற்று விடுகிறார்கள். சாதாரணமானவர்கள் எடுக்கும் படத்திற்கு எளிதில் ஓடிடி வியாபாரம் கூட கிடைப்பதில்லை என இயக்குநர் மோகன் ஜி தெரிவித்துள்ளார். நடிகர்…

தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகர்கள் சுமாரான படம் எடுத்தால் கூட எளிதாக விற்று விடுகிறார்கள். சாதாரணமானவர்கள் எடுக்கும் படத்திற்கு எளிதில் ஓடிடி வியாபாரம் கூட கிடைப்பதில்லை என இயக்குநர் மோகன் ஜி தெரிவித்துள்ளார்.

நடிகர் பிரஜன் நடிப்பில் உருவாகியுள்ள D3 படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியிட்டு விழா சென்னை தி நகரில் உள்ள தனியார் திரையரங்கில் நடைபெற்றது. இதில் இயக்குநர் மோகன் ஜி, நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

அப்போது நிகழ்ச்சியில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், ’நியாபகம் வந்ததடா அந்த நாள் நியாபகம் வந்ததடா’என்ற சென்னை 600028 படத்தின் பாடலைப் பாடினார். தொடர்ந்து பேசிய அவர், உங்களையெல்லாம் பார்க்கும் போது எனக்கு இந்தப் பாடல் தான் நியாபகத்திற்கு வருகிறது எனக் கூறி, இது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பல காலம் ஆவதாக கூறினார். அப்பாவின் கடைமை என்று தான் நான் அரசியலுக்கு வந்தேன். கடமையாக மட்டும் இல்லாமல் சேவையாகவும் செய்து வருகிறேன். வியாபாரம் மற்றும் அரசியல் என இரண்டிலும் மேன்மேலும் வளர வேண்டும் என தொடர்ந்து பயணித்து கொண்டு இருக்கிறேன் எனக் கூறினார்.

அவரைத் தொடர்ந்து பேசிய இயக்குனர் மோகன் ஜி, சமூக பிரச்சினைகள் சார்ந்து படம் எடுத்தால் தான் வியாபாரம் ஆகிறது. நட்சத்திர நடிகர்கள் சுமாரான படம் எடுத்தால் கூட எளிதாக வியாபாரம் ஆகிவிடுகிறது. சாதாரண படம் எடுப்பவர்களுக்கு எளிதில் ஓடிடி வியாபாரம் கூட கிடைப்பதில்லை எனக் கூறினார். இதனைத் தொடர்ந்து சினிமாவில் இன்னும் 4 படம் எடுக்கவுள்ளதாக கூறினார். இதனையடுத்து இயக்குனர் செல்வராகவன் நடித்து மோகன் ஜி இயக்கி வரும் பகா சூரன் படம் குறித்து பேசினார். அப்போது பகா சூரன் வெளியாகும் போது 80% சதவீதம் திரையங்கங்கள் நிரம்பி விடும் எனவும் யாரும் பண்ண முடியாத படம் பகா சூரன் எனவும் பேசினார்.

மோகன் ஜியை அடுத்து பேசிய நடிகர் கூல் சுரேஷ் ’STR -ன் பத்து தல கூல் சுரேஷ் என்றால் சொட்ட தல’ என்று ஒரு காணொளி வைரலாகி வருகிறது. அதை நான் பாசிடிவ் ஆக தான் எடுத்து கொள்கிறேன் எனக் கூறினார். இதனையடுத்து இனிமே எனது டயலாக் ‘STR ன் பத்து தல கூல் சுரேஷ் நா கெத்து தல’எனக் கூறினார். தடைக்கல் வந்தால் அதை படி கல்லாக போட்டு முன்னேறி செல் என்று என் குரு T.ராஜேந்திரன் கூறியிருக்கிறார், அதன் படி நான் பயணித்து கொண்டு இருக்கிறேன் என கூல் சுரேஷ் கூறினார்.

தொடர்ந்து பேசிய கூல் சுரேஷ் ,கொரோனா காலத்தில் எனது குழந்தைகளுக்கு பள்ளி கட்டணத்தை எம்பி விஜய் வசந்த் கட்டினார் எனக் கூறி அழுதபடியே கீழே விழுந்து வணங்கினார். தொடர்ந்து பேசிய கூல் சுரேஷ் மேடையில் ( ஆண்களை கட்டி பிடிப்பதால் ) ஹோமோ செக்ஸ் செய்கிறார் என்று சொன்னாலும் எனக்கு கவலை இல்லை எனக் கூறினார்.

 

-பரசுராமன்.ப 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.