பீகார் மாநிலத்தின் நாலந்தா மாவட்டத்தில் உள்ள ஷீத்லா கோயிலில் இன்று நடைபெற்ற ஒரு மத வழிபாட்டு நிகழ்ச்சியின் போது, கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. பெருமளவிலான பக்தர்கள் கோயிலில் திரண்டதால் ஏற்பட்ட இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 8 பெண்கள் உயிரிழந்ததாகவும் மேலும் பலர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் உள்ளூர் கிராம மக்கள் உடனடியாக, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைத் தொடங்கினர். இக்கூட்ட நெரிசல் தொடர்பான காணொளிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
News Alert! Eight women killed in stampede at temple in Bihar’s Nalanda district: Officials. pic.twitter.com/yNcYpG8urd
— Press Trust of India (@PTI_News) March 31, 2026







