நாடாளுமன்றத்தில் நாளை குடியரசு தலைவர் உரையை புறக்கணிக்க, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட 16 கட்சிகள் முடிவு செய்துள்ளன.
மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாக, நாளை நாடாளுமன்ற இருஅவைகளின் கூட்டுக் கூட்டத்தில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றவுள்ளார். இதனிடையே, புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, குடியரசுத் தலைவர் உரையை புறக்கணிக்கப் போவதாக, எதிர்க்கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
புதிய வேளாண் சட்டங்களால் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், மெல்ல மெல்ல நீர்த்து போகும் என்றும், மத்திய அரசின் நடவடிக்கை அரசியலமைப்பின் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரனாது என்றும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார். இதுபோல், வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும், விவசாயிகள் மீதான தாக்குதலை கண்டித்தும், குடியரசுத் தலைவர் உரையை புறக்கணிக்கப் போவதாக, திமுக மாநிலங்களவை குழுவின் தலைவர் திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.