தள்ளாடிய அரசு பேருந்து- தவித்த பயணிகள்

குடிபோதையில் தாறுமாறாக பேருந்தை ஓட்டிய ஓட்டுனரின் வசனம் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே  மண்டகப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கன்னியப்பன் (வயது 56). தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக…

குடிபோதையில் தாறுமாறாக பேருந்தை ஓட்டிய ஓட்டுனரின் வசனம் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே  மண்டகப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கன்னியப்பன் (வயது 56). தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கள்ளக்குறிச்சி போக்குவரத்து பணிமனையில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் கள்ளக்குறிச்சியில் இருந்து சேலம் – சென்னை  பஸ்ஸை ஓட்டி  கொண்டிருந்தார். அந்த பஸ்ஸில் சுமார் 40 பயணிகள் அமர்ந்திருந்தனர். சிவகத்துல்லா என்பவர் நடத்துநராக பணியில் இருந்தார். கள்ளக்குறிச்சி அடுத்த தியாகதுருகத்தில் புக்குளம் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது டிரைவர் கன்னியப்பன் நிலை தடுமாறி பஸ்சை தாறுமாறாக ஓட்டிச் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் கூச்சலிட்டனர். இதையடுத்து டிரைவர் பஸ்சை சாலையோரம் நிறுத்தினார்.

பின்னர் பஸ் டிரைவர் மது போதையில் அரசு பஸ்சை தாறுமாறாக ஒட்டிச் சென்றதாக தியாகதுருகம் போலீஸ் நிலையத்தில் பயணிகள் புகார் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் விரைந்து வந்து டிரைவர் கன்னியப்பனை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.  மேலும் இதுகுறித்து கள்ளக்குறிச்சி அரசு போக்குவரத்து கழக பணிமனை அதிகாரிகளுக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து மாற்று டிரைவர் இளையராஜா என்பவர் மூலம் அரசு பஸ் சென்னைக்கு தாமதமாக புறப்பட்டு சென்றது. மது போதையில் அரசு பஸ்சை டிரைவர் தாறுமாறாக ஓட்டிச் சென்ற சம்பவம் தியாகதுருகம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மது போதையில் இருந்த டிரைவர் கன்னியப்பன்  பயணிகளிடம், என்மீது எங்கு வேண்டுமென்றாலும் சென்று புகார் கொடுத்துக் கொள்ளுங்கள் என போதையில் உளறினார். மேலும் நான் போதையில் இருந்ததை அறிந்து எனக்கு பஸ்சை இயக்க கொடுத்த போக்குவரத்து துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வீடியோவில் பேசியுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.