PSLV ,GSLV ராக்கெட்டுகளைத் தொடர்ந்து 9.18 மணிக்கு விண்ணில் பாய்ந்தது SSLV-D1 ராக்கெட்.
இஸ்ரோ பயணத்தில் மூன்றாவது ராக்கெட்டாக வடிவமைக்கப்பட்டுள்ள SSLV ராக்கெட், நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று காலை 9.18 மணி அளவில் விண்ணில் வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டது. SSLV – D1 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ராக்கெட்டுக்கான, 6.52 மணி நேரத்திற்கான கவுண்டன் இன்று காலை 2.26 மணிக்குத் தொடங்கியது.
இஸ்ரோவின் PSLV , GSLV உள்ளிட்ட ராக்கெட்டுகளைத் தொடர்ந்து சிறிய விண் ஏவுதல் வாகனமாக உருவாக்கப்பட்ட SSLV ராக்கெட் ஆந்திரப் பிரதேச மாநிலம் ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து காலை 9.18 மணி அளவில் விண்ணில் செலுத்தப்பட்டது.
அண்மைச் செய்தி: ‘தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை; இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!’
விண்ணில் பாய்ந்த SSLV-D1 ராக்கெட்டை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். SSLV-D1 ராக்கெட் விண்ணில் பாய்ந்ததைத் தொடர்ந்து அதிகாரிகள் அனைவரும் கைத்தட்டி மகிழ்ந்தனர். SSLV – D1 120 டன் எடை கொண்ட இந்த மிகச்சிறிய ராக்கெட்டாக உருவாக்கப்பட்டுள்ளது. மற்ற ராக்கெட் போல இல்லாமல் 72 மணிநேரத்தில் ஒருங்கிணைக்கும் வகையில் இந்த ராக்கெட் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், SSLV ஆனது PSLV மற்றும் GSLV ஆகியவற்றுக்குப் பிறகு இஸ்ரோவின் மூன்றாவது ஏவுகணை வாகனம் என்பது குறிப்பிடத்தக்கது.








