உதயநிதி ஸ்டாலின் நடித்து மாறன் இயக்கத்தில் வெளியாகியுள்ள “ கண்ணை நம்பாதே “ திரைப்படம் குறித்து விரிவாக அலசுகிறது இந்த தொகுப்பு.
மாறன் இயக்கத்தில் வெளியாகியுள்ளது “கண்ணை நம்பாதே” திரைப்படம். இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், பிரசன்னா, ஸ்ரீகாந்த், ஆத்மிகா, சதீஷ், பூமிகா, வசுந்தரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
பொதுவாக க்ரைம் திரில்லர் என்றால் படத்தின் ஆரம்பத்தில் நடக்கும் கொலையை தேடி தேடி இறுதியில் கண்டுபிடிப்பார்கள். ஆனால் இந்த படம் கொஞ்சம் வித்தியாசம். கொலை செய்தவன் கூடவே சுத்துர மாதிரி எடுத்துள்ளார் இயக்குநர். இப்படத்தின் கதையை பற்றி சொல்லவேண்டும் என்றால் உதயநிதி ஸ்டாலின் முன் பின் அறிமுகம் இல்லாத ஒருவருடன் (பிரசன்னா) ரூம் மேட் ஆகிறார். அந்த நேரத்தில் ஒரு பெண்ணுக்கு (பூமிகா) உதவி செய்கிறார். இங்கேதான் பிரச்சனை ஆரம்பமாகிறது. இப்படி முன் பின் அறிமுகம் இல்லாத ஒருவருக்கு உதவி செய்து அங்கு ஏற்படும் பிரச்னை, எங்கு போய் முடிகிறது அதில் இருந்து எப்படி எஸ்கேப் ஆகிறார் உதய் என்பது தான் படத்தின் மீதி கதை.
இப்படம் இடைவேளை வரை அய்யயோ, போச்சுடா.., சிக்குனியா.., இதெல்லாம் தேவையா …? சும்மா இருக்க வேண்டிதானே..? அப்படிங்கிற நினைப்புகளோடு போகுது. இடை வேளைக்கு பின் ஒவ்வொருவருக்கும் இவ்வளவு ஸ்டோரி இருக்கா, ச்ச போறவேன் வரவனலா நம்புனா இப்பிடிதான் நடக்கும்..? காசுக்காக எவ்வளவு தூரம் என்றாலும் போவீங்களாடா..? அப்பிடின்ற மாதிரி படம் போகுது.
இந்த படத்தில் பிரசன்னாவை ஜீ-ன்னு கூப்பிடுவாறு உதய். இவர நம்பி தான் பெரிய பிரச்னைல மாட்டுவாறு. அதனால இந்த ஜீ என்ற வார்த்தைல அரசியல் இருக்குமோன்ற சந்தேகம் வந்தது. (ஜீ Dash-அ இல்ல Dash ஜீ).
பொதுவா பிரசன்னாவ ஹூரோவா பாக்கிறத விட வில்லனா பாக்கிறது எல்லாத்துக்குமே பிடிச்சிருச்சுன்னு சொல்லலாம். ஏன்னா வில்லன் கேரக்டரில் ஆக்ஷன் சூப்பரா பண்றாரு. திருட்டு பயலே படத்துலையே இவற்றை பார்த்தோம். உதயநிதியோட நடிப்பு வழக்கம் போல் ரொம்ப எதார்த்மா இருந்துச்சு.
சதீஷ் மற்றும் ஆத்மிகாவுக்கு இந்த படத்துல ஸ்கோப் இல்ல. படத்துல அவுங்கலும் இருக்காங்கன்னு சொல்லிக்கலாம். மே பி வேற படத்துல பிசி ஆகிட்டாங்களா அப்டின்னு தெரியல. ஸ்ரீகாந்த், பூமிகா மற்றும் வசுந்தரா கொடுத்த கேரக்டர்ல பக்காவா நடிச்சிருக்காங்க.
படத்தின் இசை பற்றி சொல்லியே ஆகனும். இசை ரொம்ப வித்தியாசமா இருக்கு. திரில்லருக்கு தேவையான அட்டகாசமான மியூசிக்க சித்து குமார் கொடுத்துருக்காரு. அவருக்கு பாராட்டுகள். படம் ஆரம்பத்திலிருந்து முடிவு வரை விறு விறுன்னு போகுது. தேவையில்லாத சீன்னுன்னு எதுவும் இல்ல. கொஞ்சம் அங்க அங்க லாஜிக் மிஸ் ஆகுது அவ்வளவுதான். இப்பலாம் லாஜிக் பத்திலாம் பேச முடியாது. இந்த படத்தோட “நேரம்” தொடர்பான க்ளைமேக்ஸ் படம் சொல்ற கருத்த லிங்க் பண்ண முடிஞ்சிச்சு. ஒருத்தனுக்கு நேரம் நல்லா இருந்தா எல்லாமே நல்லது தான் நடக்கும்ன்ற மாதிரி தான் க்ளைமேக்ஸ், எல்லாரும் அவனவனா வந்து சாவானுங்க.
இந்த படத்தோட இயக்குநர் மாறன் ஏற்கனவே இரவுக்கு ஆயிரம் கண்கள் என்ற படத்தை இயக்கியுள்ளார். அதுல அருள்நிதி நடிச்சிருப்பாரு. இந்த படமும் க்ரைம் சம்மந்தமான படம் தான். இப்ப எதற்கு அந்த படத்தை பற்றி பேசுறேன்னா? இருக்கு சம்பந்தம் இருக்கு. படத்தோட க்ளைமேக்கஸ்-ல அவருடைய யூனிவர்ஸ கொண்டு வந்துருக்காரோன்னு தோனுச்சு. ஏன்னா இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தோட டச்-அ கண்ணை நம்பாதே படத்துல வெச்சுருக்காரு. எண்ட் கார்ட்டுல நன்றி வணக்கம் போட்டவுடன தியேட்டர விட்டு வந்துராந்திங்க மாறன் சினிமேடிக் யூனிவர்ஸ் அப்டிங்கிற டைடில் நன்றி வணக்கம் பிறகு தான் தெரியும்.







