2024-ம் ஆண்டுக்கான எஸ்எஸ்சி தேர்வு அட்டவணை வெளியீடு!

எஸ்எஸ்சி என அழைக்கப்படும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் 2024-ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது. மத்திய அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் மத்திய அரசுத் துறைகளில் காலியாக உள்ள கெஜட் பதிவில்லாத…

எஸ்எஸ்சி என அழைக்கப்படும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் 2024-ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் மத்திய அரசுத் துறைகளில் காலியாக உள்ள கெஜட் பதிவில்லாத பிரிவு பி மற்றும் பிரிவு சி பணியிடங்களுக்கு போட்டித் தேர்வுகள் மூலம் பணியாளர்களை தேர்வு செய்கிறது.  இந்த பணியிடங்களை, எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வுகளை நடத்தி நிரப்பி வருகிறது.  இந்த நிலையில், ஒருங்கிணைந்த மேல்நிலைப் பள்ளி அளவிலான தேர்வு அடுத்த ஆண்டு (2024) ஜுன், ஜுலை மாதத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:  ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் ரூ.59.27 லட்சம் தங்கம் பறிமுதல்!

மேலும் ஒருங்கிணைந்த பட்டதாரி அளவிலான தேர்வு அடுத்தாண்டு செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  தொடர்ந்து இளநிலை பொறியாளர் தேர்வு அடுத்தாண்டு மே-ஜூன் மாதத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.