10 வருடங்களுக்கு முன்பு இடஒதுக்கீட்டின் அவசியம் குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரனின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அரியலூர் திமுக மாவட்ட செயலாளரும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் துறை அமைச்சருமான எஸ்.எஸ்.சிவசங்கரன் சமூகநீதி மற்றும் இடஒதுக்கீட்டின் தரவுகளை விரல் நுனியில் வைத்திருக்கும் திராவிட பாரம்பரிய குடும்ப வழிவகை வந்தவர்.அவரது தந்தை எஸ்.சிவசுப்பிரமணியன் திராவிட கழகத்தின் முன்னணி தலைவருள் ஒருவராக திகழ்ந்தவர். பின் திராவிட முன்னேற்ற கழகத்தில் பணியாற்றி மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்தவர்.
இந்தியாவில், தமிழகத்தில் இடஒதுக்கீடு குறித்து எந்த ஒரு பிரச்சனை எழுந்தாலும் டிவி, பத்திரிகைகள் அழைப்பது எஸ்.எஸ்.சிவசங்கரனைதான். பிரபல டிவி நிகழ்ச்சி ஒன்றில் இடஒதுக்கீட்டின் அவசியம் குறித்து நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் இளம்பெண் ஒருவர் ’எல்லாரும் சமம்தானே அப்போ எதற்கு இடஒதுக்கீடு’ என அறியாமையில் கேள்வி ஒன்றை முன்வைத்துள்ளார்.அதற்கு மிக எளிமையாக குறைவான நேரத்தில் இடஒதுக்கீட்டின் அவசியம் குறித்து பேசிய அவரது வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
https://twitter.com/i/status/1454036832614637574
அதில், ஒரு ஓட்டபந்தயத்தில் நிற்கும் அனைவரும் சமம் கிடையாது. அதில் பலதரப்பட்ட மக்கள் நிற்கின்றனர். உதாரணமாக மாற்றுதிறனாளிகள், பார்வை குறைபாடுடையவர்களும் முழு உடல் பலத்துடன் இருப்பவர்களும் ஒரே இடத்தில் இருந்து பந்தயத்தில் ஓட வைப்பது சரியா? அதை போன்றுதான் இன்னும் கிராமங்களில் ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களது அடிப்படை உரிமைகளே கிடைக்காமல், சாதி அடிப்படையில் வேலை பார்த்து கொண்டும் உள்ளனர். சமூகநீதி என்பதற்கு பெரிய வரலாறே உண்டு.
கீழே இருப்பவர்களை கை பிடித்து தூக்கிவிடுவதுதான் இடஒதுக்கீடு என்று பேசிய அவரின் பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சரியான நபருக்கு சரியான துறைதான் வழங்கப்பட்டுள்ளது என்றும் இணையவாசிகள் கமெண்ட் செய்தும் வருகின்றனர்.
– மா.நிருபன் சக்கரவர்த்தி







