செங்கம் அருகே அம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா: திரளான பக்தர்கள் தரிசனம்!

செங்கம் தோக்கவாடி அருகே உள்ள அருள்மிகு ஶ்ரீதேசத்து மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தோக்கவாடி பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி…

செங்கம் தோக்கவாடி அருகே உள்ள அருள்மிகு ஶ்ரீதேசத்து மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தோக்கவாடி பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஶ்ரீதேசத்து மாரியம்மன் ஆலயத்தில் குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக சிவாச்சாரியார்களல்  1008 மந்திரங்கள் ஓதப்பட்டு- லஷ்மி பூஜை, விக்னேஸ்வரர் பூஜை, கோமாதா பூஜை செய்தும்,  புண்ணிய தீர்த்தங்களை வைத்து சிறப்பு பூஜை செய்து பின்னர் ஆலயத்தின் உச்சியில் உள்ள ஐம்பொன்னால் ஆன கலசத்தின் மீது  புண்ணிய தீர்த்தம்தெளிக்கப்பட்டது. பின்னர் கோபுர தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் மீது புண்ணிய தீர்த்தம் தெளிக்கப்பட்டு, அதன் பின்னர் மூலவரான அம்மனுக்கு சிறப்பு அபிஷேக தீபாரதனை செய்தனர்.
இந்த குடமுழுக்கு விழாவில் செங்கம் சுற்றுவட்டாரத்தில் உள்ள பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள்  கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து அருள்மிகு ஶ்ரீதேசத்து மாரியம்மனை வழிபட்டனர்.
சௌம்யா.மோ
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.