திருச்சி மத்திய சிறைச்சாலையில் உள்ள சிறப்பு முகாமில் இலங்கை தமிழர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி மத்திய சிறைச்சாலை உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்கள் திருச்சி கெட்டியன் பாண்டி, விருதுநகர் புஷ்பராஜ், சுகந்தன் ஆகிய மூன்று பேரின் குடும்பத்தினர் இன்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அண்மைச் செய்தி : இறந்து போன தந்தையின் உடல் முன்பு திருமணம் செய்து கொண்ட மகன் – நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்
தங்களது கணவர் பற்றிய எந்த ஒரு விபரத்தையும் போலீசார் தெரிவிக்கவில்லை என்றும், தண்டனை காலம் முடிந்து ஓராண்டு ஆகியும் விடுதலை செய்ய மறுக்கின்றனர் என குற்றம் சாட்டி தங்களுக்கான நியாயம் கிடைக்க வேண்டும் என கோரி மூன்று குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சிறப்பு முகாம் வாசலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் மரியாதை இல்லாமல் தங்களை நடத்துவதாக கூச்சலிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.







