இலங்கையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எம்.பி.யுமான இரா.சம்பந்தன் காலமானார்

இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரான இரா. சம்பந்தன் நேற்று இரவு 11 மணியளவில் காலமானார். இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எம்.பியுமான இரா. சம்பந்தன் காலமமானார்.  உடல் நலக்குறைவால் கொழும்பு தனியார்…

இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரான இரா. சம்பந்தன் நேற்று இரவு 11 மணியளவில் காலமானார்.

இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எம்.பியுமான இரா. சம்பந்தன் காலமமானார்.  உடல் நலக்குறைவால் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 91.

இவர் உடல்நலக்குறைவு காரணமாக கொழும்புவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இலங்கை தமிழர் பிரச்னைகளுக்கு தீர்வு காண சம்பந்தன் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவராகவும் செயல்பட்டுள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.