முக்கியச் செய்திகள் தமிழகம்

கொரோனா மீண்டும் பரவும் – ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை

கொரோனா தொற்று முடிந்து விட்டது இனி நமக்கு வராது என்ற எண்ணத்தை மாற்றி
உரிய கட்டுபாடுகளோடு இல்லாவிட்டால் அது மீண்டும் தலைதூக்கும் என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.

 

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டிற்கான பயிற்சி மையத்தில் பல்வேறு மாநிலங்களில் உள்ள மாணவ மாணவியர்கள் படித்து வருகின்றனர். இதில் கேரள மாநிலத்தை சேர்ந்த 2 பேருக்கு
ஒமிக்ரான் தொற்று ஏற்பட்டதால் இப்பயிற்சி மையத்தில் அந்த 2 பேருடன் தொடர்பில் இருந்த 16 பேரை தனிமைபடுத்தி உள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 

இதனால் அங்கு தடுப்பு பணிகளை மக்கள் நல்வாழ்வு துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது, தனிமைப்படுத்தப்பட்ட 12 மாணவர்கள் 4 மாணவிகளை சந்தித்து தைரியமாக இருக்கும்படி ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், இந்தியாவில் குறிப்பாக மகாராஷ்டிரா, மும்பை, கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் தொற்று பாதிப்பு ஏறுமுகமாக உள்ள நிலையில் தமிழ்நாட்டில் ஏப்ரல் 15 ஆம் தேதி மிகக்குறைவாக பதிவாகியுள்ளது. நாள் ஒன்றுக்கு 22 என பதிவானது தற்போது படிப்படியாக ஏறிக்கொண்டு வருகிறது. குறிப்பாக விடுமுறை நாட்களில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் குறைவாகிறது.

 

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கோவை மற்றும் மொத்தமுள்ள 38 மாவட்டங்களில் பெரிய நகரங்களில் தற்போது பல்வேறு இடங்களில் தினசரி ஒன்றிரண்டு
பாதிப்புகள் என பதினேழு மாவட்டங்களில் நேற்றையதினம் பதிவாகின. இந்த பயிற்சி மையத்தில் வெளிமாநிலங்களில் இருந்தும் பல மாவட்டங்களில் இருந்தும் பயிற்சி பெறுகின்றனர். வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களுக்கு பயணம் செய்வதால் இங்கு 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு ஒருவர் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையிலும், ஒருவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

தனிமைப்படுத்தப்பட்ட 16 பேருக்கும் லேசான அறிகுறிகள் தான் இருந்தது இது ஆறுதல் அளிக்க கூடிய வகையில் உள்ளது என்றார். தற்போது உலகளவில் மார்ச் ஏப்ரல் மாதங்களில் ஒமிக்ரான் உள்வகை தான் லேசாக உள்ளது. இதில் BA 1 2 3 அதிகமாக இருந்து வந்தது. தமிழ்நாட்டில் BA2 தான் இருந்து வந்தது. இது தவிர ஏற்கனவே பாதிக்கப்பட்ட பல்வேறு பயிற்சி மையங்களில் ஆய்வு செய்த போதும் எல்லோருக்கும் லேசான அறிகுறிகள் தான் இருந்து வருகிறது. தொண்டை கரகரப்பு லேசான காய்ச்சலுடன் சரியாகி வருகின்றனர் என கூறினார்.

 

பொதுமக்கள் இந்த நேரத்தில் கொரோனா முடிந்து விட்டது இனி நமக்கு வராது என்ற எண்ணத்தை மாற்றி உரிய கட்டுபாடுகளோடு இல்லாவிட்டால் அது மீண்டும் தலைதூக்கும் என ராதாகிருஷ்ணன் எச்சரித்தார். அதனை தலைதூக்காமல் இருப்பதற்கு பொதுமக்களின் பங்களிப்பு முக்கியமானது என கேட்டுக் கொண்டன அவர், கோவிட் கொந்தளிப்பை நாம் வெற்றிகரமாக குறைத்தோம் தற்போது முழுமையாக அழிக்கும் நேரத்தில் கவனக்குறைவாக இருந்து மீண்டும் இதனை பெரிய அளவில் முன்னேறவிடாமல் தடுக்க வேண்டும் என்றார்.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மதுரை மாநகராட்சி மைய அலுவலகத்துக்கு ரூ.55 லட்சம் மதிப்பில் புதிய நுழைவாயில்

Web Editor

தமிழ்நாட்டில், ஆளுங்கட்சியாக காங்கிரஸ் மாறும்: கே.எஸ். அழகிரி

Halley Karthik

எம்ஜிஎம் மருத்துவமனையில் 2வது நாளாக இயக்குநர் பாரதிராஜாவுக்கு சிகிச்சை

Web Editor