முன்னாள் டிவிட்டர் ஊழியர்கள் SPILL என்ற புதிய தளத்தை டிவிட்டருக்குப் போட்டியாக உருவாக்கியுள்ளனர்.
2022 அக்டோபரில் எலோன் மஸ்க் ட்விட்டரைப் பொறுப்பேற்றபோது, அவர் செய்த முதல் காரியங்களில் ஒன்று, முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால் உட்பட நிறுவனத்தின் சில உயர் அதிகாரிகளை நீக்கினார்.
பின்னர் துறைவாரியாகப் பல பணியாளர்களை பணிநீக்கம் செய்தார். மேலும் சில ஊழியர்கள் தாங்களாகவே ராஜினாமா செய்தனர்.
இப்போது, மைக்ரோ-பிளாக்கிங் தளத்திற்கு எதிராகச் சந்தையில் விரைவில் ஒரு புதிய போட்டி நிறுவனத்தை டிவிட்டரை முன்னாள் ஊழியர்களால் உருவாக்கியுள்ளனர்.
கடந்த ஆண்டு டிசம்பரில், முன்னாள் டிவிட்டர் ஊழியர்களான அல்போன்சோ ஃபோன்ஸ் டெரெல் மற்றும் டிவாரிஸ் பிரவுன் ஆகியோர் ஸ்பில் என்ற புதிய தளத்தை தங்கள் சொந்த முயற்சியில் உருவகி வருவதாகத் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தற்போது, அதன் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.
SPILL – இன் டெவலப்பர்கள் தளத்தின் ஒரு சிறிய ஸ்னீக்-பீக் வீடியோவை வெளியிட்டுள்ளனர். 17 வினாடிகள் கொண்ட டீஸர் வீடியோ, ஒரு துடிப்பான பின்னணி இசையைக் கொண்டுள்ளது. இது மக்கள் தங்கள் கருத்தைக் கூறுவதற்கும், படங்களைப் பகிர்வதற்குமான ஒரு தளமாகத் தோன்றுகிறது.







