முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

மத்திய பட்ஜெட் 2023 – விலை உயரும், விலை குறையும் பொருட்களின் முழு பட்டியல்

2023-24ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வர இருப்பதால் பிரதமர் மோடி தலைமையிலான அரசு தாக்கல் செய்யும் கடைசி முழு பட்ஜெட் இதுவாகும். இந்த பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

வருமான வரி விலக்குக்கான வரம்பு உயர்த்தப்பட்டது, உள்கட்டமைப்புக்கான முதலீடு அதிகரித்துள்ளது, பெண்களுக்கு தனி சேமிப்பு திட்டம் என பல அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன. பல பொருட்களுக்கு வரியும் உயர்த்தப்பட்ம் குறைக்கப்பட்டும் இருக்கிறது. இந்த பட்ஜெட்டால் எந்த பொருட்களின் விலை உயரும் மற்றும் விலை குறையும் பொருட்களின் பட்டியலை தற்போது பார்க்கலாம்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த பட்ஜெட்டுக்குப் பிறகு அத்தியாவசியமற்ற பொருட்களின் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜூவல்லரி, அதிநவீன எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் போன்ற பொருட்களின் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்நாட்டு தயாரிப்புகளை மேம்படுத்தும் விதமாக வரும் நிதியாண்டில்  குடை, ஹெட்போன், பேஷன் ஜூவல்லரி போன்றவற்றுக்கு இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பட்ஜெட்டில் தங்கத்துக்கான இறக்குமதி வரி உயர்த்தப்பட்டுள்ளது.

கேமரா, டிவி, மொபைல் போன் உதிரிபாகங்களுக்கான அடிப்படை இறக்குமதி வரி 2.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. கேமரா உதிரிபாகங்கள், லென்ஸ்கள் மற்றும் லித்தியம் பேட்டரிகளுக்கான வரி விலக்கு 1 ஆண்டுக்கு நீட்டித்துள்ளது. மின்சார வாகன பேட்டரிகளுக்கான வரி குறைக்கப்பட்டுள்ளது. ரப்பர் மற்றும் ஆடைகளுக்கான இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.

விலை குறையும் பொருட்கள்

  • கேமரா லென்ஸ்
  • மொபைல் போன்களின் லென்ஸ்
  • டிவி பாகங்கள்
  • பொம்மைகள்
  • சைக்கிள்கள்

விலை உயரும் பொருட்கள்

  • தங்கம்
  • வெள்ளி
  • பிளாட்டினத்தால் செய்யப்பட்ட பொருட்கள்
  • சிகரெட்டுகள்
  • காப்பர்
  • துணிகள்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மீண்டும் லீக் ஆன வாரிசு திரைப்படத்தின் காட்சிகள்

G SaravanaKumar

தொடர்ந்து குறைகிறது.. தமிழகத்தில் புதிதாக 24,405 பேருக்கு கொரோனா தொற்று!

Halley Karthik

உத்தரகாண்ட் முதலமைச்சராக புஷ்கர் சிங் தாமி நாளை பதவியேற்பு

Janani