மாற்றுதிறனாளிகளுக்கு மெரினாவில் பிரத்யேக நடைபாதை!

சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுதிறனாளிகளுக்கு நடைபாதை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.  வங்காள விரிகுடா கடற்கரையில் உலகின் மிக நீளமான கடற்கரைகளில் இரண்டாவது கடற்கரையாக சென்னையிலுள்ள மெரினா கடற்கரை திகழ்கிறது. சென்னை மக்களின்…

சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுதிறனாளிகளுக்கு நடைபாதை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 

வங்காள விரிகுடா கடற்கரையில் உலகின் மிக நீளமான கடற்கரைகளில் இரண்டாவது கடற்கரையாக சென்னையிலுள்ள மெரினா கடற்கரை திகழ்கிறது. சென்னை மக்களின் பிரதான பொழுதுபோக்கு மையமாக இருப்பத மெரினா கடற்கரையாகும்.

சென்னையில் அடையாளமாக விளங்கும் மெரினாக கடற்கரையில் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன. மதுரை பாண்டிய மன்னனிடம் நீதி கேட்கும் கண்ணகி சிலை, அறிஞர் அண்ணா சமாதி, மறைந்த முதலமைச்சர்களான எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சமாதி, மறைந்த முன்னாள் முதலமைச்சரான கருணாநிதியின் சமாதிகள் மெரினா கடற்கரையில் உள்ளது. சென்னைக்கு வரும் வெளியூர் பயணிகள் தவறாமல் இங்கு வந்து இயற்கையோடு இயைந்த மெரினாவின் அழகை கண்டு ரசிப்பர்.

இந்நிலையில் மாற்றுதிறனாளிகள் கடற்கரைக்கு செல்வதற்கு வசதியாக அவர்களுக்காக பிரத்யேகமாக நடைபாதை அமைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது. விவேகானந்தா இல்லம் எதிரே 250 மீட்டர் நீளம், 3 மீட்டர் அகலம் கொண்ட நிரந்தர பாதை இது அமைக்கப்பட்டு வருகிறது. சவுக்கு, கருவேலமரக் கட்டைகளால் இந்த பாதை அமைக்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.