சிறப்பு ரயில்கள் ரத்து!

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், 16 சிறப்பு ரயில்களை ரத்து செய்வதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் கடந்த ஏப் 20-ம் தேதி முதல் தமிழகத்தில் வார…

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், 16 சிறப்பு ரயில்களை ரத்து செய்வதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் கடந்த ஏப் 20-ம் தேதி முதல் தமிழகத்தில் வார நாட்களில் இரவு நேர ஊரடங்கும் வார இறுதி நாளான ஞாயிற்றுகிழமைகளில் முழு ஊரடங்கு என தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமைகளான, வரும் 25-ஆம் தேதியும், மே 2-ஆம் தேதியும் 16 சிறப்பு ரயில்களை ரத்து செய்வதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருச்சி – காரைக்குடி, மதுரை – விழுப்புரம், குருவாயூர் – புனலூர் இடையிலான சிறப்பு ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல கொல்லம் – ஆலப்புழை, சென்னை மற்றும் புதுச்சேரி, திருச்சி மற்றும் கரூர் இடையே இயக்கப்படும் ரயில்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.