நாசா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் இணைந்து செலுத்திய ஃபால்கன்-9 ராக்கெட், 4 விண்வெளி வீரர்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா மற்றும் தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் இணைந்து தயாரித்த ஃபால்கன்-9 ராக்கெட், புளோரிடாவின் கென்னடி விண்வெளி ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த ராக்கெட்டில், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஒருவர், நாசா விஞ்ஞானிகள் இரண்டு பேர், ஐரோப்பாவைச் சேர்ந்த ஒருவர் என 4 விண்வெளி வீரர்கள் சென்றனர். சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு சென்று இவர்கள், தங்களது பணியை மேற்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்வெளிக்குச் சென்ற வீரர்கள் தங்களது ஆய்வை முடித்த பின்னர், அவர்கள் சென்ற அதே ராக்கெட்டில் உள்ள கேப்சூலில் பூமிக்கு திரும்பி வரவுள்ளனர். இது வெற்றிகரமாக அமைந்தால், விண்வெளிப்பயண வரலாற்றில் புதிய சாதனையாக இருக்கும் என கூறப்படுகிறது.