தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில், சென்னையில் உள்ள மக்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க தமிழ அரசு சிறப்பு பேருந்துகள் இயக்க உள்ளது.
கடந்த 1 ஆம் தேதி முதல் வருகின்ற ஏப்ரல் 5 ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துங்கள் இயக்கப்படுகின்றன. கடந்த 1 ஆம் தேதி முதல் சென்னையிலிருந்து தினசரி இயக்கக்கூடிய 2,225 பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகளாக 3,090 பேருந்துகளும் சேர்த்து மொத்தம் 14,215 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மேலும் கோயம்புத்தூர், திருப்பூர், சேலம் மற்றும் பெங்களூர் ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு 2,644 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
குறிப்பாக விடுமுறை நாளான 4.04.201 மற்றும் 5.05.2021 ஆகிய தேதிகளில் பின்வரும் அட்டவணை இருக்கும் பேருந்துகள் குறிப்பிட்ட இடத்திற்கு இயக்கப்படுகின்றன.







