முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

எம்.எல்.ஏ.வாக பதவியேற்க போவது எப்போது? – ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி

எம்.எல்.ஏவாக பதவியேற்பு எப்போது என்பது குறித்து சபாநாயகர் விரைவில் அறிவிப்பார் என்று ஈரோடு கிழக்கில் வெற்றி பெற்ற ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணியில் நின்று வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். மு.க ஸ்டாலினுடனான சந்தித்த பிறகு ஈவிகேஸ் இளங்கோவன் செய்தியளர்களுக்கு பேட்டி அளித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அப்போது பேசிய அவர், எம்.எல்.ஏவாக பதவியேற்பு எப்போது நடைபெறும் என்பது குறித்து தமிழ்நாடு சட்டப் பேரவை சபாநாயகர் அப்பாவு விரைவில் அறிவிப்பார். ஈரோடு கிழக்கில் நாங்கள் வெற்றிப் பெற்றதற்கு காரணம் பணம் தான் என்று அதிமுகவினர் சொல்கின்றனர். அந்த தொகுதியில் அதிமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட்ட தென்னரசு வாக்குப்பதிவு நடந்த அன்று தேர்தல் சுமூகமாக நடைபெற்றது. தேர்தல் ஆணையம் நியாயமாக நடந்து கொண்டது. எந்த தவறும் நடக்கவில்லை என்று பேட்டி கொடுத்திருந்தார். ஆனால் தற்போது தோல்வி அடைந்துவிட்டோம் என்ற உடன், எடப்பாடி பழனிசாமி சொல்லிக் கொடுத்ததை அப்படியே சொல்லியிருக்கிறார் என தெரிவித்தார்;.

தொடர்நது பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவனிடம், 38 ஆண்டுகளுக்கு பிறகு சட்டமன்றத்திற்குள் செல்வது குறித்து செய்தியாளர்கள் எழுப்பினர். அந்த கேள்விக்கு நகைச்சுவையாக பதிலளித்து பேசிய அவர், “சட்டசபையில் அன்று ஏசி இல்லை.. இன்று ஏசி இருக்கிறது” என்று கூறினார். மேலும் காங்கிரஸ் தலைவர் பதவி உங்களுக்கு கிடைக்கும் என்று எதிபார்க்கிறீர்களா? என செய்தியாளர்கள் கேட்ட போது, இப்போது இருக்கும் தலைவரே நன்றாகத்தான் செயல்பட்டு கொண்டு இருக்கிறார். அதில் மாற்றங்கள் வேண்டும் என்று சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்று பதிலளித்தார். மேலும் நாம் தமிழர் கட்சி ஈரோடு கிழக்கில் 3-வது இடம் பெற்றிருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த இளங்கோவன், அப்படியொரு கட்சி இன்றைக்கும் தமிழ்நாட்டில் இருக்கிறதா என்று எனக்கு தெரியவில்லை” என கூறினார்.

பின்னர் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை விமர்சித்து பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன், ஜெயக்குமாருக்கு தினமும் ஏதாவது கெட்ட கனவு வருகிறது போல. அதைதான் வெவ்வேறு விதமாக தினமும் வெளியில் சொல்லிக் கொண்டு திரிகிறார் . அவர் மீது நிறைய வழக்குகள் இருக்கிறது. அதனால் முதலில் அவவரை காப்பாற்றிக் கொள்ள சொல்லுங்கள். மற்றவர்களை பற்றிய கருத்துக்களை பிறகு சொல்லலாம் என்று விமர்சனம் செய்தார்.

மேலும் அரசியல் நிலைப்பாடுகளால் ஏற்படும் கருத்து மாற்றங்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்து பேசிய இளங்கோவன், 1967-ஆம் ஆண்டுக்கு பிறகான எல்லா தேர்தல்களிலும் கூட்டணி என்ற ஒன்று இருந்து கொண்டு தான் இருக்கினறன. கூட்டணிகள் மாறும் போதும், அரசியல் நிலைகள் மாறும் போதும் அதற்கு ஏற்ப கருத்துகளை சொல்வது இயல்புதான். நானும் சூழ்நிலைக்கு ஏற்ப ஒரு காலத்தில் தவறான கருத்துகளை பதிவு செய்திருக்கலாம். தவறுகளை திருத்திக்கொள்வதில், தவறேதும் இருப்பதாக நான் நினைக்கவில்லை என்று கூறினார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பொறியியல் சேர்க்கைக்கு வேதியியல் பாட மதிப்பெண்கள் கட்டாயமா? – உயர்கல்வித்துறை விளக்கம்

G SaravanaKumar

காமன்வெல்த் போட்டி; நீரஜ் சோப்ரா விலகல்?

G SaravanaKumar

எந்த கட்சிக்கும் ஆதரவு கிடையாது: வெள்ளையன் அறிவிப்பு

EZHILARASAN D