‘Spark…’ – The GOAT படத்தின் 3வது பாடல் வெளியானது!

விஜய் நடிக்கும் தி கோட் திரைப்படத்தின் மூன்றாவது பாடலான “ஸ்பார்க்” பாடல் வெளியானது. லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படமான ‘தி கிரேட்டஸ்ட்  ஆஃப் ஆல் டைம்ஸ் படத்தை (The G.O.A.T. –…

விஜய் நடிக்கும் தி கோட் திரைப்படத்தின் மூன்றாவது பாடலான “ஸ்பார்க்” பாடல் வெளியானது.

லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படமான ‘தி கிரேட்டஸ்ட்  ஆஃப் ஆல் டைம்ஸ் படத்தை (The G.O.A.T. – Greatest Of All Times) வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இப்படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியன்று வெளியாக உள்ளது. முன்னதாக, விசில் போடு மற்றும் சின்னச் சின்ன கண்கள் ஆகிய இரண்டு பாடல்களைப் படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர்.சின்ன சின்ன கண்கள் பாடல் மறைந்த பாடகியும் யுவன் சங்கர் ராஜாவின் சகோதரியுமான பவதாரணியின் குரலில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல மெலோடியாக கொண்டாடப்பட்டது.

இந்நிலையில் 3வது பாடல் குறித்த அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு  வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்திருந்தார். இந்த நிலையில் கோட் படத்தின் 3வது பாடல் “ஸ்பார்க்” பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. இப்பாடலை வெங்கட் பிரபுவின் அப்பாவான கங்கை அமரன் எழுதியுள்ளார். யுவன் சங்கர் ராஜா மற்றும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமான விருஷா பாலு ஆகியோர் இணைந்து இப்பாடலை பாடியுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.