காலிறுதிக்கு முன்னேறியது ஸ்பெயின் – கண்ணீருடன் விடைபெற்ற ரொனால்டோ!

உலக கோப்பை கால்பந்து ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் போர்ச்சுகலை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் அணி காலிறுதிக்கு முன்னேறியது.

2026 ஃபிஃபா உலக கோப்பை கால்பந்துப் தொடர் அமெரிக்கா, கனடா , மெக்சிகோ ஆகிய நாடுகளில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் லீக் சுற்றுகள் மற்றும் ரவுண்ட் ஆஃப் 32 சுற்றுகள் முடிந்து தற்போது ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற ரவுண்ட் ஆஃப் 16 போட்டியில் ஸ்பெயின் – போர்ச்சுகல் அணிகள் மோதின. போட்டி தொடங்கியது முதலே இரு அணிகளும் கோல் அடிக்க தீவிரமாக முயற்சித்தன. ஆனால் ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனையடுத்து ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் இரு அணிகள் டிஃபென்ஸ் ஆடியது. இதனால் 90 நிமிட முடிவில் இரு அணிகளும் கோல் அடிக்காமல் 0-0 என்று சம நிலையில் இருந்தது.

இந்த நிலையில் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. அப்போது ஆட்டத்தின் 91-வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் மைக்கேல் மெரினோ ஒரு கோல் அடித்தார். இதனால் ஸ்பெயின் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.

இந்த போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம் போர்ச்சுகல் அணி உலக கோப்பையில் இருந்து வெளியேறியது. இதனால் உலகம் முழுவதும் அதிக ரசிகர்களைக் கொண்ட போர்ச்சுகல் வீரர் கிரிஸ்டியானோ ரொனால்டோவுக்கு இது கடைசி சர்வதேசப் போட்டியாக அமைந்தது. அவர் தனது கடைசி ஆட்டத்தில் கண்ணீருடன் வெளியேறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.