விண்வெளிக்கு சுற்றுலா சென்ற 4 பேர் பத்திரமாக பூமிக்கு திரும்பியுள்ளனர்.
உலகின் மிக பிரபலமான தொழிலதிபரும், உலக பணக்காரர்களில் ஒருவருமான எலன் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மூலம் இன்ஸ்பிரேஷன் 4 என்னும் விண்வெளி சுற்றுலா பயணத் திட்டத்தைத் தொடங்கினார். இது பொதுமக்களை விண்வெளிக்கு அழைத்து செல்லும் திட்டம். இந்த திட்டத்தின்படி கடந்த வியாழக்கிழமை, ‘பால்கன் 9’ ராக்கெட்டில், அமெரிக்காவின் ’ஷிப்ட் 4 பேமன்ட்ஸ் ’ நிறுவன தலைவர் ஜாரிட் ஐசக்மேன் தலைமையிலான 4 பேர் கொண்ட குழுவினர் விண்வெளிக்கு பயணம் செய்தனர்.
விண்வெளியில், ஈர்ப்பு விசையற்ற இடத்தில் எப்படி வசிப்பது என்பது குறித்த பயிற்சிகள் அவர்களுக்கு கடந்த ஆறு மாதங்களாக அளிக்கப்பட்டன. ராக்கெட் விண்ணில் செலுத்தப் பட்ட 12 நிமிடங்களில், வெற்றிகரமாக புவியின் நீள்வட்டப்பாதைக்குள் விண்கலம் நுழைந்து, 3 நாட்களாக பூமியிலிருந்து 575 கி.மீ. உயரத்தில் சுற்றி வந்தது.
இந்நிலையில், விண்வெளி சுற்றுலா மேற்கொண்ட நான்கு பேரும் பத்திரமாகத் தரையிறங் கினர். இவர்கள் தரையிறங்கும் காட்சி யூடியூபில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
சனிக்கிழமை அட்லாண்டிக்கில் புளோரிடா கடற்கரையில் அவர்கள் பாதுகாப்பாக தரை யிறங்கினர். இதன் வீடியோவை, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ட்விட்டரில் பகிர்ந்துள்ளது. இதையடுத்து விண்வெளி சென்று திரும்பியவர்களுக்கு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் எலன் மஸ்க் வாழ்த்து தெரிவித்தார்.
கடந்த ஜூலை மாதம் ரிச்சர்ட் பிரான்சனின் வர்ஜின் கேலக்டிக் நிறுவனம் தனது முதல் விண்வெளிப் பயணத்தை மேற்கொண்டது.விண்வெளியில் சில நிமிடங்கள் மிதந்துவிட்டு பூமிக்குத் திரும்பினர். பிறகுர் ப்ளூ ஆரிஜின் நிறுவனத்தின் விண்கலம் மூலமாக, அந்நிறு வனத்தின் தலைவர் ஜெஃப் பெஸோஸ் விண்வெளி சென்று திரும்பினார். இப்போது ஸ்பேக்ஸ் எக்ஸ் நிறுவனம் சென்று திரும்பியுள்ளது.








