மசாஜ் நிலையங்களில் விதிமீறல்கள் நடைபெறுவதாக புகார்கள் வந்தால் மட்டுமே சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை தாம்பரத்தில் உள்ள வில்லோஸ் ஸ்பா உரிமையாளரை, காவல்துறையினர் பணம் பறிக்கும் விதமாக மிரட்டுவதாக வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்பா என்றாலே பாலியல் தொழில் செய்யும் இடம் என்ற கண்ணோட்டத்தில் தான் பார்ப்பீர்களா என காவல்துறைக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து, மசாஜ் நிலையங்களில் விதிமீறல்கள் நடைபெறுவதாக புகார்கள் வந்தால் சட்டப்படி மட்டுமே நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்படி பணம் பறிக்கும் நோக்கில் மிரட்டல் நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது எனவும் போலீசாருக்கு அறிவுறுத்தினார். மேலும், வழக்கு விசாரணையை நவம்பர் மாதம் 11 ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.








