அரசியல் பழி வாங்கும் நடவடிக்கை: எஸ்.பி.வேலுமணி ட்வீட்

தனது வீடு மற்றும் அலுவலகங்களில் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். சென்னை, கோவை உள்ளிட்ட இடங்களில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வீடு,…

தனது வீடு மற்றும் அலுவலகங்களில் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

சென்னை, கோவை உள்ளிட்ட இடங்களில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வீடு, அலுவலகம் மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று சோதனை நடத்தினர். சென்னை சேப்பாக்கம் எம்எல்ஏ விடுதியில், எஸ்.பி. வேலுமணியிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது, விடுதிக்குள் அத்துமீறி நுழைய முயன்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதாக அதிமுக மாவட்டச் செயலாளர் ஆதிராஜாராம், முன்னாள் எம்பி வெங்கடேசன் உள்ளிட்ட 10 பேர் மீது திருவல்லிக்கேணி போலீசார் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் இந்த சோதனை, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக நடத்தப்பட்டிருப் பதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: அரசியல் காழ்ப்புணர்ச்சி காரண மாக திமுக அரசின் அரசியல் பழி வாங்கும் நடவடிக்கையின் போது, நியாயத்தின் பக்கம் நின்றும், எனக்கு நம்பிக்கையூட்டும் வகையிலும் ஆதரவாக நின்ற கழக ஒருங்கிணைப் பாளரும், எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப் பாளர், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், கழக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், நண்பர்கள் பொதுமக்கள், உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.