தென் ஆப்பிரிக்காவுக்கு அதிர்ச்சி அளித்த அயர்லாந்து

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் அயர்லாந்து அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.   அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள்…

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் அயர்லாந்து அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

 

அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டி மழையால் ரத்தான நிலையில், 2வது போட்டி டப்ளினில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா, பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அயர்லாந்து அணியின் கேப்டன் பால்பிர்னி 102 ரன்களும், டெக்டர் 79 ரன்களும், டோக்ரெல் 45 ரன்களும் விளாச, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் அந்த அணி 5 விக்கெட் இழப்புக்கு 290 ரன்கள் குவித்தது.

291 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதிகபட்சமாக வான் டர் டுசன் 49 ரன்கள் எடுக்க, அந்த அணி 48.3 ஓவர்களில் 247 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது.

இதன் மூலம் 43 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி அயர்லாந்து அணி, வரலாற்றில் முதல் முறையாக தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக வெற்றியை பதிவு செய்தது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.