உலகக்கோப்பை தொடரின் இன்றை போட்டியில் தென்ஆப்பிரிக்கா – ஜிம்பாப்வே அணிகள் மோதிய நிலையில், மழை குறுக்கிட்டதால், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது.
உலகக்கோப்பை டி-20 தொடரின் சூப்பர் 12 சுற்று நடைபெற்று வருகிறது. ஹோபர்ட்டில் நடைபெற்ற ஆட்டத்தில் ஜிம்பாப்வே – தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதியது. போட்டி தொடங்குவதற்கு முன்பே மழை குறிக்கிட்டதால், போட்டி 9 ஓவர்களாக குறைக்கப்பட்டது. பின்னர் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்து.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அந்த அணி 9 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 79 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் வெஸ்லி அதிகபட்சமாக 35 ரன்களை சேர்த்தார். பின்னர் களமிறங்கிய தென்ஆப்பிரிக்கா அணி, தொடக்கம் முதலே அதிரடி காட்டி விளையாடினர். குயின்டன் டி காக் அசத்தலாக விளையாடி கொண்டிருந்தபோது, மீண்டும் மழை குறிக்கிட்டது. இதனால் 3 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி அந்த அணி 512 ரன்கள் எடுத்திருந்த நிலையில், போட்டி நிறுத்தப்பட்டது.
வெற்றி பெற 24 பந்துகளில் 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், போட்டி நிறுத்தப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது. தென்ஆப்பிரிக்காவில் குயின்டன் டி காக் 18 பந்துகளில் 47 ரன்களை எடுத்திருந்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஒரு ஓவர் மட்டும் வீசியிருந்தால் தென்ஆப்பிரிக்கா அணி வெற்றியை ருசித்திருக்கும் என ரசிகர்கள் முனுமுனுத்தப்படியே சென்றனர்.