ஹரிஷ் கல்யாண், இந்துஜா நடிக்கும் ’பார்க்கிங்’ படம் வரும் செப். 28-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷியின் தயாரிப்பு நிறுவனமான தோனி என்டெர்டெயின்மென்ட் நிறுவனம், தமிழில் ‘எல்ஜிஎம்’ எனப்படும் ‘லெட்ஸ் கெட் மேரிட்’ என்ற படத்தை வெளியிட்டது. இந்த படத்தில் கதாநாயகனாக ஹரிஷ் கல்யாண் மற்றும் நாயகியாக இவானா ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ரமேஷ் தமிழ்மணி இயக்கியுள்ள இப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இப்படத்தைத் தொடர்ந்து, த்ரில்லர் படம் ஒன்றில் ஹரிஷ் கல்யாண் நடித்து வருகிறார். அறிமுக இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் எழுதி இயக்கும் இப்படத்துக்கு ‘பார்க்கிங்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தை சோல்ஜர்ஸ் ஃபேக்டரி நிறுவனம் தயாரிக்கிறது.இப்படத்தில் ஹரிஷ் கல்யாணுடன் இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரன், பிரார்த்தனா நாதன், இளவரசு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சாம் சிஎஸ் இசையமைக்க, ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வரும் நிலையில், விரைவில் படப்பிடிப்பு நிறைவடைய உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பார்க்கிங் படம் வரும் செப்டம்பர் 28 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வித்தியாசமான கதைக்களத்தை மட்டுமே விரும்பி ஏற்று நடிக்கும் ஹரிஸ் கல்யாணின் இந்த படத்திற்கு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்து வருகிறது.