தமிழகம்

விரைவில் சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரம்; துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு!

விரைவில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க உள்ளதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி தமிழக அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. பல்வேறு கட்சி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் விரைவில்விரைவில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கவுள்ளதாக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டியில் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் பள்ளிக் கல்வித் துறை சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில், கலந்துகொண்ட துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 10 ஆயிரத்து 954 பயனாளிகளுக்கு உதவிகள் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனது பிரச்சாரம் குறித்த தகவலை தெரிவித்தார். மேலும்,
நடிகர் ரஜினிகாந்த் பூரண உடல் நலம் பெற இறைவனிடம் பிரார்த்திப்பதாகவும் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

80 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்ட பெரியகோவில்

Vandhana

டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

G SaravanaKumar

RT – PCR பரிசோதனைக்கான கட்டணம் குறைப்பு: தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

Arivazhagan Chinnasamy

Leave a Reply