புதிய கட்சிகள்: அவகாசத்தை 7 நாட்களாக குறைத்த தேர்தல் ஆணையம்!

புதிய கட்சி தொடர்பான அறிவிப்பினை வெளியிடும் கால அவகாசம் 7 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. ஒரு அரசியல் கட்சியை ஆரம்பித்தால், அதனை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய முறைப்படி விண்ணப்பிக்க வேண்டும். பிறகு கட்சி ஆரம்பித்தது…

புதிய கட்சி தொடர்பான அறிவிப்பினை வெளியிடும் கால அவகாசம் 7 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.

ஒரு அரசியல் கட்சியை ஆரம்பித்தால், அதனை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய முறைப்படி விண்ணப்பிக்க வேண்டும். பிறகு கட்சி ஆரம்பித்தது தொடர்பான தகவலை ஊடகங்களில் விளம்பரமாக வெளியிட்டு, ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்க அறிவுறுத்த வேண்டும்.

ஆட்சேபனைகள் எதுவும் இல்லையெனில் பதிவு பெற்ற கட்சியாக தேர்தல் ஆணையம் அறிவிக்கும். அதுபோல, ஆட்சேபனை தெரிவிக்கும் தரப்பினரின் கருத்துக்கள் திருப்தியளிக்கவில்லை என்றாலும், அதனை நிராகரித்து புதிய கட்சியை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கும்.

இந்த நிலையில் புதிய கட்சிகள் தொடர்பான பொது அறிவிப்பினை வெளியிட 30 நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலையில், அதனை 7 நாளாக குறைத்துள்ளது இந்திய தேர்தல் ஆணையம். இந்த உத்தரவு தேர்தல் நடைபெறும் தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு மட்டும் பொருந்தும் எனவும் விளக்கமளித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.