பாஜக பிரமுகர் சோனாலி போகட் மரணம் தொடர்பான வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்க இருப்பதாக கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் அறிவுறுத்தியுள்ளார்.
ஹரியானாவைச் சேர்ந்த நடிகையும் அரசியல்வாதியுமான சோனாலி போகட் கடந்த மாதம் கோவாவில் சடலமாக மீட்கப்பட்டார். மாரடைப்புதான் மரணத்திற்கு காரணம் என்று கூறப்பட்டாலும், அவரது குடும்பத்தினர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குற்றம் சாட்டினர்.
பிரேத பரிசோதனை அறிக்கையில் அவரது உடலில் காயம் இருப்பதாக கூறியதையடுத்து, கோவா காவல்துறையால் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.
விசாரணையில் சோனாலி போகட்க்கு இரண்டு கூட்டாளிகளால் வலுக்கட்டாயமாக போதைப்பொருள் கொடுக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் தொடர்ந்து பலர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் சோனாலி மரணத்தில் மர்மம் நீடிப்பதால் இந்த வழக்கை சிபிஐ யிடம் ஒப்படைக்க வேண்டும் என கோவா அரசுக்கு ஹரியான முதல்வர் கோரிக்கை வைத்தார். இதேபோல் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்ததை அடுத்து இந்த வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க இருப்பதாக கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுத இருப்பதாகவும் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்







