மூளை நரம்பு நோயால் பாதிக்கப்பட்ட மகன்: மாவட்ட ஆட்சியரிடம் உதவிக்கோரும் தாய்

கன்னியாகுமரி அருகே மகனைக் காப்பாற்ற வேண்டும் அல்லது கருணை கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என அவரது  தாய் மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீருடன் கோரிக்கை வைத்துள்ளார்.  கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சற்குண வீதியைச் சேர்ந்தவர்…

கன்னியாகுமரி அருகே மகனைக் காப்பாற்ற வேண்டும் அல்லது கருணை கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என அவரது  தாய் மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீருடன் கோரிக்கை வைத்துள்ளார். 
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சற்குண வீதியைச் சேர்ந்தவர் ஜெயபால். இவரது மனைவி சாந்தா. இவர்களுக்குச் சேதுபதி என்ற மகனும் ஒரு  மகளும் உள்ளனர். இருவரையும் அவர்களது பெற்றோர் வங்கிக் கடன் வாங்கி பிடெக் படிக்க வைத்தனர்.
இதில் மகளுக்குத் திருமணமான நிலையில் மகன் நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆட்டோ மொபைல் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் தேதி சேதுபதிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதாகக் கூறி நிறுவனத்தின் அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அங்கு அவருக்கு பல்வேறு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதோடு  பின்னர் மேல்சிகிச்சைக்காக  நாகர்கோவிலில் மற்றும்  திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளிலும் அவர் அனுமதிக்கப்படார். இந்நிலையில் சேதுபதிக்கு மூளை நரம்பு பாதிக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் கடந்த 33 மாதங்களாகச் செயலற்ற நிலையில் வீட்டில் படுக்கையில் உள்ள அவருக்கு சிகிச்சைக்கான எந்த உதவியும் கிடைக்கவில்லை.
ஏற்கனவே படிப்பு செலவுக்கு கடன் வாகிய நிலையில், சிகிச்சைக்கு பணம் செலவழிக்க முடியாமல் தவித்த அவரது பெற்றோர், மாவட்ட ஆட்சியரை நாடியுள்ளனர். பெங்களூரில் உள்ள நிமான்ஸ் மருத்துவமனையில் சேர்த்து சேதுபதியை காப்பாற்ற வேண்டும் அல்லது அவரை  கருணை கொலை செய்ய  அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் மகன் பணிபுரிந்த நிறுவனத்தில் என்ன நடந்தது என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என அவரது பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க மனு அளித்தனர். பெற்ற மகனின் சிகிச்சைக்கு பணம் இல்லாமல், கருணை கொலை செய்யும் முடிவுக்கு துணிந்த அவரது பெற்றோரின் நிலமை அனைவரையும் அதிர்ச்சியுல் ஆழ்த்தியுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.