குழந்தை பிறந்த 10 நாட்களிலேயே மக்கள் பணியில் ஈடுபட்ட தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி

பிரசவ காலத்தில் விடுபட்ட கோப்புகளின் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளும்படி அதிகாரியிடம் கூறிவிட்டுச் சென்றவர் குழந்தை பிறந்து பத்து நாட்களில் மக்கள் பணிக்கு திரும்பியுள்ளார். தாம்பரம் மாநகராட்சியில் முதல் மேயராக  வசந்தகுமாரி பொறுப்பேற்றார். 26 வயதான…

பிரசவ காலத்தில் விடுபட்ட கோப்புகளின் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளும்படி அதிகாரியிடம் கூறிவிட்டுச் சென்றவர் குழந்தை பிறந்து பத்து நாட்களில் மக்கள் பணிக்கு திரும்பியுள்ளார்.

தாம்பரம் மாநகராட்சியில் முதல் மேயராக  வசந்தகுமாரி பொறுப்பேற்றார். 26 வயதான தமிழகத்தில் இளம் மேயரான வசந்தகுமாரிக்கு 21ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது குழந்தை பிறந்து பத்து நாட்களே நிறைவடைந்த நிலையில் 11-வது நாளான இன்று தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் வசந்தகுமாரி மக்கள் பணியை இன்று துவங்கினார்.

பிரசவ காலத்தில் விடுபட்ட கோப்புகளின் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளும்படி அதிகாரியிடம் கூறிவிட்டு சென்றவர் குழந்தை பிறந்து பத்து நாட்களில் மக்கள் பணியாற்ற மாநகராட்சி அலுவலகம் வந்த மேயருக்கு பணியாளர்களும் பொதுமக்களும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் போதும் அவர் இதுபோன்று மக்கள் பணியில் ஈடுபட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் இந்த செயல் மூலம் பொதுமக்களிடம் மிகுந்த பாராட்டுகளைப் பெற்று வருகிறார். இவருடன் பணியாற்றிய அதிகாரிகள் நிறை மாத காலத்தில் இப்படி களப்பணிகள் ஈடுபட வேண்டாம் எனவும் அலுவல் பணிகளை மட்டும் பார்த்து ஓய்வு எடுங்கள் என்று பலர் அறிவுறுத்தினர். ஆனாலும் அவற்றை  பொருட்படுத்தாத அவர் பேறு காலத்திலும் கள ஆய்வுப்பணிகளில் ஈடுபட்டு வந்து பலருக்கு முன்மாதிரியாக விளங்கிவருகிறார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.