குற்றம் செய்திகள்

வனப்பகுதியில் பிணமாக தோண்டி எடுக்கப்பட்ட ஊராட்சி மன்ற துணை தலைவர் மகன்; கஞ்சா போதையில் கொலை செய்ததாக நால்வர் கைது!

ஊராட்சி மன்ற துணை தலைவர் மகன் வனப்பகுதியில் பிணமாக தோண்டி எடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள கூத்தக்குடி கிராமத்தைச்
சேர்ந்தவர் ஜெய்சங்கர்- செந்தமிழ்ச்செல்வி.செந்தமிழ் செல்வி ஊராட்சிமன்ற துணை
தலைவராக உள்ளார். இவர்களது மகன் ஜெகன் ஸ்ரீ தொழுதூர் அருகே தனியார்
பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இவர் 24 ம் தேதி முதல் காணவில்லை என்று பெற்றோர்களும், உறவினர்களும் தேடி வந்த நிலையில், வரஞ்சரம் காவல் நிலையத்திலும் புகார் அளித்திருந்தனர். இந்நிலையில் அப்பகுதி இளைஞர்கள் அருகில் உள்ள நீர்நிலைகள் வனப்பகுதிகளுக்குள்ளும் அலைந்து திரிந்து  தேடியுள்ளனர். இருந்த போதிலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

ஆனால் கூத்தக்குடி அருகே சமத்துவபுரம் பகுதியில் நான்கு இளைஞர்கள் போதையில் தாங்கள் தான் கொலை செய்தோம் என்று தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்ததை ஒட்டு கேட்ட சிறுவன் ஓடிவந்து அக்கிராம இளைஞரிடம் கூறியுள்ளான். உடனடியாக இளைஞர்கள் அவனை பிடித்து விசாரித்ததில் கொலை செய்து காட்டில் புதைத்துவிட்டதாக கூறியதால் போலீசாருக்கு தகவல் தர, அந்த நால்வரையும் போலீசார் உடனடியாக கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டது.

இந்நிலையில் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் கூத்தக்குடி அருகே உள்ள வனக்காட்டு பகுதியில் கொலை செய்து புதைத்திருக்கும் இடத்தையும் காட்டினர். அதன்படி கள்ளக்குறிச்சி டி எஸ் பி ரமேஷ் தலைமையிலான போலீசார் சடலத்தை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மாவட்ட மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து நான்கு பேரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.

காணாமல் போன கல்லூரி மாணவன் வனப் பகுதியில் பிணமாக புதைக்கப்பட்ட செய்தி கூத்தக்குடி கிராமத்தை மட்டுமல்லாது கள்ளக்குறிச்சி மாவட்டத்தையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கஞ்சா விற்பனையை தடுக்க முடியாமல் போலீசார் அலட்சியமாக செயல்பட்டதன் விளைவே இக்கொலைக்கு முக்கிய காரணம் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் நான்கு பேரும் மது அருந்த சென்ற போது ஜெகன் ஸ்ரீ யையும் அழைத்து சென்று மது அருந்திவிட்டு ஜெகன் ஸ்ரீ க்கும் மது குடிக்க வைத்து கஞ்சா போதையில் பாட்டிலால் தலையில் அடித்தும் பாட்டில் கண்ணாடியால் கழுத்தை அறுத்தும் கொலை செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் கொலைக்கான காரணம் குறித்து போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

டெல்லியில் பட்டாசுகளை அனுமதிக்க வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

EZHILARASAN D

இரட்டை இலை சின்னம் முடங்கினாலும் ஜெயலலிதா பாணியில் பலத்தை நிரூபிப்பாரா இபிஎஸ்?

Lakshmanan

2012இல் நடிகர் முதல் 2021இல் திமுக எம்.எல்.ஏ. வேட்பாளர் வரை உதயநிதியின் பயணம்!

Gayathri Venkatesan