முக்கியச் செய்திகள் செய்திகள் சினிமா

என்னது நான் செத்துட்டேனா?: சாமி திரைப்பட வில்லன் வெளியிட்ட வீடியோ!

நான் நலமாக இருக்கிறேன், சமூக வலைதளங்கள்தான் என்னை கொன்றுவிட்டன என்று நடிகர் கோட்டா சீனிவாச ராவ் வீடியோ வெளியிட்டுள்ளார். கோட்டா சீனிவாச ராவ் உயிரிழந்துவிட்டதாக வதந்தி பரவி வந்த நிலையில் இதுதொடர்பாக வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் 700க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்தவர் கோட்டா சீனிவாச ராவ். தமிழில் சாமி திரைப்படத்தில் பெருமாள் பிச்சை என்ற கதாபாத்திரத்திலும், திருப்பாச்சி திரைப்படத்தில் சனியன் சகடை என்ற கதாபாத்திரத்திலும் நடித்து புகழ் பெற்றவர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில், கோட்டா சீனிவாச ராவ் உயிரிழந்துவிட்டதாக வதந்தி பரவியது. இதுதொடர்பாக அவரே வீடியோ வெளியிட்டு தான் நலமுடன் இருப்பதாக விளக்கமளித்துள்ளார்.

மேலும் அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:

நான் இறந்து விட்டதாக பரவிய செய்தி எனக்கு தெரியவந்தது. காவல்துறையினர் என் வீட்டுக்கு பாதுகாப்புக்காக வந்தனர். அவர்களிடம் இதுபோன்ற போலி செய்திகள் பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுங்கள் என்று வலியுறுத்தினேன்.

அண்மைச் செய்தி: திருப்பதி ஏழுமலையான் கோவில் தரிசனம் – ஆன்லைன் முன்பதிவு விவரம் வெளியீடு

உகாதி பண்டிகை கொண்டாட்டப் பணிகளில்  நான் பிஸியாக இருந்தபோது, பல தொலைபேசி அழைப்புகள் எனக்கு வந்தன.  என் இடத்தில் வேறு யாராவது முதியவர் இருந்திருந்தால் அவர் இதயத்துடிப்பு நின்றிருக்கும். புகழ், பணம் வேண்டுமென்றால் அதை சம்பாதிக்க பல வழிகள் உண்டு, அதற்காக இப்படியான வதந்திகளை பரப்புவது சரியானது அல்ல. நான் நலமுடன் இருக்கிறேன். வதந்திகளை நம்ப வேண்டாம்.

இவ்வாறு கோட்டா சீனிவாச ராவ் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

11ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு ஆகஸ்டில் துணைத் தேர்வு!

Web Editor

‘மாநிலக் கல்விக் கொள்கையை வகுப்பதில் கால தாமதம் கூடாது’: அன்புமணி ராமதாஸ், எம்.பி

Arivazhagan Chinnasamy

கூரையை உடைத்துக்கொண்டு வீட்டுக்குள் விழுந்த காட்டெருமை

EZHILARASAN D