முதுநிலை படிப்பில் சேருவதற்காக நடத்தப்படும், கேட் தேர்வில் வெற்றி பெற்றவர்களை என்எல்சியில் பணியமர்த்துவது சமூக நீதி கொள்கைக்கு எதிரானது என திமுக எம்பி டி.ஆர்.பாலு குற்றம்சாட்டியுள்ளார்.
மக்களவையில் பேசிய திமுக எம்பி டி.ஆர்.பாலு, கடந்த 39 ஆண்டுகளாக முதுநிலை படிப்புகளில் சேரும் பட்டதாரிகளுக்காக கேட் தேர்வு நடத்தப்படுகிறது என தெரிவித்தார். ஆனால், கேட் தேர்வில் பெற்றி 299 பேர் என்எல்சியில் பணியமர்த்தப்பட்டுள்ளது இடஒதுக்கீடு மற்றும் சமூக நீதி கொள்கைகளுக்கு எதிரானது என குற்றம்சாடினார்.
முதுநிலை படிப்பில் சேருவதற்காக நடத்தப்பட்ட கேட் தேர்வில் வெற்றி பெற்ற இளநிலை பட்டாதாரிகளை என்எல்சியில் பணியமர்த்தியுள்ளது அநீதியின் உச்சம் என குற்றம்சாட்டிய டி.ஆர்.பாலு, என்எல்சியில் 299 பேர் பணியமர்த்தப்பட்ட விவகாரத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும், சமூக நீதி, இடஒதுக்கீடு கொள்கையின்படி பொதுத்துறை நிறுவனங்களில் பணி வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
தி.மு.க நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு டெல்லியில் செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது பேசிய அவர், என்எல்சியில் பொறியியல் பட்டதாரி நியமனத்தில் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கவில்லை என்பது தொடர்பாக வருத்தம் தெரிவித்த தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இது குறித்து நாடாளுமன்றத்தில் பேசும்படி கூறியிருந்தார். அதன்படி இன்று மக்களவையில் இவை குறித்து கேள்வி எழுப்பினோம்.
இவ்விவகாரம் தொடர்பாக நெய்வேலி சிஎம்டி அதிகாரியை நேரில் வருமாறு மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைத்துள்ளார். 4ம் தேதி இவ்விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெறும், அதில் தமிழக அரசு தரப்பில் பங்கேற்போம் என கூறினார்.







