முக்கியச் செய்திகள் உலகம் விளையாட்டு

துப்பாக்கி சுடுதல் போட்டி: ரஷ்யா, பெலாரஸ் அணிகளுக்கு தடை

துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்க ரஷ்யா மற்றும் பெலாரஸ் வீரர்களுக்கு சர்வதேச சம்மேளனம் தடை விதித்துள்ளது.

உக்ரைன் – ரஷ்யப் போர் வலுத்துவரும் நிலையில், ரஷ்ய படைகள் 8 வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. மேலும், உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகள், குடியிருப்பு பகுதிகள் என ரஷ்ய படைகள் தாக்கி அழித்து வருகின்றன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதேபோல், ரஷ்ய படைகளுக்கு உக்ரைன் ராணுவம் பதில் தாக்குதல் கொடுத்து வருகிறது. அதே நேரத்தில், உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என உலக நாடுகள் ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன. ஒரு புறம் போர் நிறுத்த பேச்சு வார்த்தைகளும் நடந்து வருகின்றன.

அதே வேளையில், பல்வேறு நாடுகளும் ரஷ்யாவுக்கு எதிராக தடைகளை அறிவித்து வருகிறது. அதில் ஒன்றாக, ரஷ்யா மற்றும் அதன் ஆதரவு நாடான பெலாரஸ் ஆகிய நாடுகளின் விளையாட்டு அணிகள் சர்வதேச அளவில் நடைபெறும் அனைத்து விளையாட்டு போட்டிகளிலும் பங்கேற்க தடை விதிக்க வேண்டும் என, விளையாட்டு அமைப்புகளுக்கு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி பரிந்துரை செய்திருந்தது.

இதை ஏற்று சர்வதேச விளையாட்டு சம்மேளனங்கள் ரஷியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கால்பந்து, உலக தடகளம், ஐஸ் ஸ்கேட்டிங், டென்னிஸ் உள்ளிட்ட போட்டிகளில் விளையாட ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டியில் ரஷியா, பெலாரஸ் வீரர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கலந்து கொள்ள தடை விதிக்கப்படுவதாக சர்வதேச துப்பாக்கி சுடுதல் சம்மேளனம் நேற்று அறிவித்தது. எகிப்து நாட்டில் உள்ள கெய்ரோவில் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனால் இந்த உலக கோப்பை போட்டியில் ரஷ்ய வீரர்கள் தொடர்ந்து பங்கேற்க முடியாது என்று தெரிகிறது.

அதே நேரத்தில் 2013 ம் ஆண்டு ரஷ்ய அதிபர் புதினுக்கு வழங்கிய 9 வது டான் கவுரவ கருப்பு பட்டையை திரும்ப பெற முடிவு செய்து இருப்பதாக உலக தேக்வாண்டோ சம்மேளனம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தி லெஜண்ட் படத்தின் கன்னட டிரைலர் வெளியீடு

Web Editor

நாகலாந்து துப்பாக்கிச்சூடு சம்பவம்; அமித்ஷா நாடாளுமன்றத்தில் விளக்கம்

Arivazhagan Chinnasamy

முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் மீது சொத்துக் குவிப்பு வழக்கு

G SaravanaKumar