கண்களில் கருப்புத்துணி கட்டி கடலில் இங்கி மீனவர்கள் போராட்டம்!

நெல்லை மாவட்டம் . கூடுதாழையில் தூண்டில் வளைவு அமைக்க கோரி – கண்களில் கருப்புத் துணி கட்டி,  கடலில் இடுப்பளவு நீரில் நின்று மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லை மாவட்டம், கூடுதாழை கடல் அரிப்பால்…

நெல்லை மாவட்டம் . கூடுதாழையில் தூண்டில் வளைவு அமைக்க கோரி – கண்களில் கருப்புத் துணி கட்டி,  கடலில் இடுப்பளவு நீரில் நின்று மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை மாவட்டம், கூடுதாழை கடல் அரிப்பால் பெரிதும் பாதிப்படைவதால்,
தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்று நீண்ட நாளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில், கோரிக்கையை நிறைவேற்ற கோரி வேலை நிறுத்தம் செய்து , தொடர் போராட்டத்தில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆறாவது நாளாக மீனவ பொதுமக்கள், தங்கள் கண்களில் கருப்பு துணி
கட்டிக் கொண்டு, கடலில் இடுப்பளவு நீரில் நின்று போராடினர். மேலும், மத்திய , மாநில
அரசுகளை எதிர்த்தும், தூண்டில் பாலம் கோரிக்கையை வலியுறுத்திம் ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் , திரளான பெண்கள் கலந்து கொண்டு போராட்டத்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

—கு.பாலமுருகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.