‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தில் நடித்துள்ள நடிகை, லிஜோமோல் ஜோஸ் திடீரென திருமணம் செய்துகொண்டார்.
மலையாளத்தில் வெளியான ‘மகேஷிண்டே பிரதிகாரம்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் லிஜோமோல் ஜோஸ். இவர், சசி இயக்கத்தில் வெளியான,‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தில், சித்தார்த் ஜோடியாக நடித்தார்.
இந்த படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இதைத் தொடர்ந்து ‘தீதும் நன்றும்’ என்ற படத்தில் நடித்தார்.
சூர்யா நடிப்பில் அமேசான் பிரைமில் வெளியாகவுள்ள ‘ஜெய் பீம்’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இவர், திடீரென்று திருமணம் செய்து கொண்டார்.
இவரது கணவர் பெயர் அருண் ஆண்டனி. இவர்களுடைய திருமணம் கடந்த 4 ஆம் தேதி கேரளாவில் கிறிஸ்தவ முறைப்படி நடைபெற்றுள்ளது. இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இதையடுத்து அவருக்கு சமூக வலை தளங்களில் நடிகர், நடிகைகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.








