சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ படப்பிடிப்பு நிறைவு!

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வந்த ‘அமரன்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது. சிவகார்த்திகேயன் நடித்துள்ள 21வது திரைப்படம் அமரன். இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். இதனை ராஜ்கமல்…

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வந்த ‘அமரன்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது.

சிவகார்த்திகேயன் நடித்துள்ள 21வது திரைப்படம் அமரன். இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். இதனை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் கதாநாயகியாக சாய்பல்லவி நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

 

இந்த திரைப்படத்தில் “மேஜர் முகுந்த் வரதராஜன்” என்கின்ற ராணுவ வீரர் கதாபாத்திரத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். காஷ்மீரில் உள்ள இந்திய ராணுவத்திருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடக்கும் மோதலை மையமாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது நிறைவடைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

அதை தொடர்ந்து இன்று அமரன் படக்குழுவினர்க்கு சிவகார்த்திகேயன் விருந்தளித்தார். படத்தில் பணிப்புரிந்த அனைவரும் இதல் கலந்துக் கொண்டனர். அவர்களுக்கு அன்பாக பிரியாணி பரிமாறும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இறுதிகட்டப் பணிகள் முடிந்து விரைவில், படத்தை திரைக்குக் கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.