’பராசக்தி’ திரைப்படத்திற்கான டப்பிங் பணிகளை தொடங்கிய சிவகார்த்திகேயன்..!

‘பராசக்தி’ படத்திற்கான டப்பிங் பணிகளை நடிகர் சிவகார்த்திகேயன் துவங்கியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான  சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா ஆகியோர் இணைந்து நடிக்கும் படம் பராசக்தி. இப்படத்தை இறுதிச்சுற்று, சூரரை போற்று ஆகிய படங்களை இயக்கிய சுதா கொங்கொரா இயக்குகிறார். மேலும் தெலுங்கு நடிகை ஸ்ரீ லீலா இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.

டான் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு  பொங்கலை முன்னிட்டு வெளியாகிறது.

சமீபத்தில் இப்படத்தின் ’அடி அலையே’, ‘ரத்னமாலா’ ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில்,‘பராசக்தி’ படத்திற்கான டப்பிங் பணிகளை நடிகர் சிவகார்த்திகேயன் துவங்கியுள்ளதாக படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.